முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யை வாஷ் அவுட் செய்து வரலாற்று சாதனை படைத்தது இந்தியா!!

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

டெல்லி: மார்ச் -- 25 - டெல்லியில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது இந்தியா. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி 262 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்தியாவின் பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஓஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியில் பேட்டிசனை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஓஜா தமது 100-வது விக்கெட்டை எடுத்தார். பின்னர் இந்திய அணி இன்னிங்ஸை தொடங்கியது. புஜாரா 52 ரன்கள், முரளி 57 ரன்கள் எடுத்திருந்தனர். டெண்டுல்கர் 32 ரன்களை எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்தது. புவனேஷ்குமார் 10 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எஞ்சியிருந்த விக்கெட்டுகளையும் இந்திய அணி அடுத்தடுத்து பறிகொடுத்து 272 ரன்கள் எடுத்தது. அஸ்வினும் இஷாந்த் சர்மாவும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆயினர். பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 54 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. இந்த தடுமாற்றம் நீடிக்கவே 164 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 10 ரன்கள் கூடுதலாக எடுத்தது. இதனால் 155ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய்- புஜாரா ஜோடி தொடங்கியது. இந்திய அணி 19 ரன்களே எடுத்த நிலையில் முரளி விஜய் அவுட் ஆனார். பின்னர் புஜாராவுடன் கோஹ்லி இணைந்தர். இந்த ஜோடி நிதானமாக நின்று ரன்களைக் குவித்தனர். இந்திய அணி 123 ரன்களைக் குவித்த நிலையில் 41 ரன்கள் எடுத்த கோஹ்லி அவுட் ஆனார். பின்னர் களத்துக்கு வந்த டெண்டுல்கர், ரஹானே ஆகியோர் வந்த வேகத்திலேயே தலா 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். புஜாராவுடன் கேப்டன் டோணி இணைந்து வெற்றி இலக்கை எளிதாக கடந்தனர். 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது இந்திய அணி. கடந்த ஆண்டு இந்தியாவை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் தோற்கடித்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருந்ததுதான் இதுவரை வரலாற்று சாதனையாக இருந்தது. தற்போதைய வெற்றி மூலம் 4 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியிருக்கிறது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இப்படி எதிரணியை முழுமையாக தோற்கச் செய்வது இப்போதுதான் முதல் முறை!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்