முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் ஓட்டு போடுபவர்களிடம் பிரச்சாரம் செய்ய தடை-தேர்தல் ஆணையம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 25 - தபால் ஓட்டு போடுபவர்களிடம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் ஓட்டு முறை நடைமுறையில் உள்ளது. அவர்கள் தேர்தல் பணிக்கு செல்லும் மையத்திலேயே அவர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாளன்று காலை 7 மணிக்குள் தபால் மூலமாகவோ, தேர்தல் அதிகாரியிடமோ ஓட்டுக்களை ஒப்படைத்து விட வேண்டும்.
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு போட ஏற்கனவே 12 ஏ படிவம் பெற்றவர்கள் மே மாதம் 13 ம் தேதி காலை 7 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும். இந்த நிலையில் இதுவரை தபால் ஓட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஒரு சிலர் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்