முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிகனில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடினார் போப்.

திங்கட்கிழமை, 25 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

வாடிகன் நகரம், மார்ச் - 26 - போப் பிரான்சிஸ் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் முதல் முறையாகக் கொண்டாடினார். குருத்தோலைப் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை இந்த தேவாலயத்தில் புனித வாரம் தொடங்கியது. அங்கு யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்பட 2,50,000 பேர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கிய போப் பிரான்சிஸ், எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு போதித்தார். இயேசுநாதர், ஜெருசலேமுக்கு வந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து அவர் நினைவுபடுத்தினார். ாஉலகத்தின் பார்வையில் ஒரு பொருட்டாகவே கருதப்படாத ஏழை, எளியவர்களின் உள்ளங்களில் இயேசு நம்பிக்கையை ஏற்படுத்தினார்ா என்று போப் தெரிவித்தார். பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் ஜூலை மாதம் நடைபெற உள்ள கத்தோலிக்க இளைஞர் திருவிழாவில் தாம் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்த அவர் பின்னர், தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்குக் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கார்டினல்களும் கலந்து கொண்டனர். போப் பிரான்சிஸ் இம்மாதம் 13 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே, ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உணர்த்தி வருகிறார். குருத்தோலை ஞாயிறு பண்டிகைக்குப் பின்னர் வரும் புனித வாரமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள, கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான ஈஸ்டர் பண்டிகையுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்