முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 10 ம் தேதிக்குள் கட்டணத்தை நிர்ணயிக்கா விட்டால் பள்ளிகளை திறக்க மாட்டோம் தனியார் பள்ளிகள் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 25 - மே மாதம் 10 ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்காவிட்டால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான ஆங்கில வழி சமச்சீர் புத்தகங்களை இதுவரை அரசு வழங்கவில்லை. மே 10 ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுக்களின் மீது விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை பிப்ரவரி 5 ம் தேதிக்குள் முடிந்திருக்க வேண்டும். இந்த கட்டண நிர்ணயத்தை மே 10 ம் தேதிக்குள் நிர்ணயித்தால் மட்டுமே ஜூன் மாதத்தில் பள்ளிகளை திறக்க முடியும். அதே போல் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தில் பள்ளிகளில் சிமிண்ட் தளத்தில் கூரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தனியார் பள்ளிகளுக்கு மாநகராட்சியில் 5 கிரவுண்டு, நகராட்சியில் 8 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒரு ஏக்கர், கிராம ஊராட்சியில் 3 ஏக்கர் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு மே 31 ம் தேதியுடன் அங்கீகாரம் முடிகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றினால் அங்கீகாரம் கிடைக்காது. எனவே இந்த விதிமுறைகளை செயல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்