முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பாஸ்போர்ட்: வங்க தேசத்தை சேர்ந்த 6 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - சென்னை விமான நிலையத்தில் இருந்து ரியாத் வழியாக மஸ்கட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் கொல்கத்தா பாஸ்போர்ட்டில் 6 பேர் மஸ்கட் செல்ல முயன்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது. அவர்கள் 6 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 6 பேரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்மன்னன் (28), அவினுனூர் (23), ஜாகீர் உசேன் (25), ஜிபின்சேக் (27), மிராஜ் சேக் (20), முகமது முனிர்வர்ஷ் சாகர் (27) ஆகியோர் என தெரிய வந்தது.

இவர்கள் மஸ்கட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்க்க சென்றனர். இதற்காக கொல்கத்தா மூலம் டெல்லி வந்தனர். அங்கு ஏஜெண்டு ஒருவரிடம் தலா ரூ. 2 லட்சம் கொடுத்து போலியாக பாஸ்போர்ட் தயார் செய்தனர். பின்னர் ரெயிலில் சென்னைக்கு வந்த அவர்கள் விமானம் மூலம் மஸ்கட் செல்ல முயன்றனர். ஆனால் அதிகாரிகள் சோதனையில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்