முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பை காக்க நடந்த போராட்டம்: இங்கிலாந்து பெண் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 27 - ஆக்ரா ஓட்டலில் தங்கியிருந்தபோது தனது கற்பை காத்துக்கொள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்த இங்கிலாந்து பெண் அந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஓட்டல் ஆக்ரா மகாலில் தங்கியிருந்தவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஜெசிகா டேவீஸ்(31). அவரிடம் ஹோட்டல் மேனேஜர் சில்மிஷம் செய்ய முயன்றதால் அவர் பால்கனியில் இருந்து கீழே குதித்து தப்பித்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு சென்ற அவர் நடந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், 

நான் ஆக்ரா மகால் ஓட்டலில் தங்கியிருந்த போது நள்ளிரவில் ஓட்டல் மேனேஜர் தன் கையில் 2 பாட்டில் எண்ணெயுடன் என் அறைக்கு வந்தார். எனக்கு மசாஜ் செய்து விடுவதாகக் கூறினார். நான் அவரை வெளியே தள்ளி விட்டு கதவைப் பூட்டினேன். ஆனால் அவர் போகாமல் தன்னை அறைக்குள் விடுமாறு கூறி கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அவர் போவதாகத் தெரியாததால் உதவி கேட்டு நான் கத்தினேன். அப்போது இன்னொரு நபரும் அவருடன் சேர்ந்து கொண்டு தட்டினார். 

எனது அறையில் உள்ள பால்கனி வழியாக அவர்கள் வந்து விடக் கூடும் என்பதை உணர்ந்தேன். அந்த நேரம் மின்தடை ஏற்பட்டதால் அறை இருட்டாக இருந்தது. என்னுடைய போனும் வேலை செய்யவில்லை. என்னை காத்துக் கொள்ள பால்கனியில் இருந்து குதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் இரண்டாவது மாடியாக இருந்தாலும் பரவாயில்லை என்று பால்கனியில் இருந்து குதித்து விட்டேன். இதில் காலில் காயம்பட்ட நான் தெருவில் ஓடிப் போய் உதவி கேட்டேன். ஆனால் யாரும் புரிந்துகொள்ளவில்லை. 

இறுதியில் ஒரு ரிக்ஷாக்காரர் லிப்ட் கொடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தேன். இந்தியாவுக்கு தனியாகச் செல்லும் பெண்களை எச்சரிக்கவே எனக்கு நேர்ந்ததை தற்போது தெரிவித்துள்ளேன். இதனால் நான் இந்தியாவுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன். ஆனால் இனிமேல் தனியாக செல்ல மாட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்