முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரணடைய வந்த புலிகள் 3 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது-ஐ.நா. பரபரப்பு தகவல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஏப்.- 25 - இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 3 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐலேண்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.  இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட ஐ.நா. குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்களை இலங்கை நாளிதழான ஐலேண்ட் அவ்வப்போது வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

சில தினங்களுக்கு முன் வெளியிட்ட செய்தியில் இலங்கை போரின் போது அப்பட்டமாக மனித உரிமை மீறல் நடைபெற்றதாகவும், மாபெரும் இனப் படுகொலை அரங்கேற்றப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இறுதிக் கட்ட போரில் சரணடைய வந்த விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான நடோன், பூலித்தேவன், ரமேஷ் ஆகியோரை ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

நடேசன், பூலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் சரணடைய விரும்புவதாக மத்தியஸ்த குழுவினரிடம் விருப்பம் தெரிவித்தனர். அக்குழுவினர் இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டறிந்த இருவரும் புலிகளின் தலைவர்களை சரணடைய ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இலங்கை அரசு சொன்ன இடத்துக்கு மூவரும் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது சமாதானத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். ஆனால் அவர்களை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐலேண்ட் நாளிதழ் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago