முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டி: முதல்வர் பிரதமருக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று நிகழ்ச்சியமைப்பாளர்கள் உறுதியளித்தால் தான் தமிழ்நாட்டில் அந்த போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நான் மீண்டும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களை வெளிப்படுத்தி மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக இது மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் 2013 ஏப்ரல் 3 ம் தேதி முதல் தொடங்கி மே 26 வரை நடக்கின்றன. இந்தப் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதை நான் அறிந்துகொண்டுள்ளேன்.

தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தினர் நடத்தி வரும் இன அழிப்பு அக்கிரமங்கள் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களும் குழந்தைகளும் மக்களும் கொல்லப்படுவது குறித்து தங்களுக்குத் தெரிந்திருக்கும். இது போன்ற மனித உரிமை மீறல் விவகாரங்களால் இலங்கை அரசு பல உலக நாடுகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளானது. 

இலங்கை அரசின் இத்தகைய தமிழ் இன அழிப்புச் செயல்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்தின் இன அழிப்பு விவகாரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆதாரங்கள் மேலும் மேலும் வெளிவர வெளிவர, தமிழகத்தில் உண்ணாவிரதங்களும் போராட்டங்களும், தீக்குளிப்புகளும், பெரிய அளவிலான போராட்டங்களும் அதிகரித்துக் கொண்டுள்ளன.

சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் இருக்கும் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழக அப்பாவி மீனவர்கள்,இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து, அடிக்கடி தங்களுக்கு கடிதம் எழுதி வருகிறேன்.  தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், பொருள் இழப்பும், உயிருக்கு அச்சுறுத்தலும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய நடவடிக்கைகளால், இலங்கை படைகளுக்கு எதிரான உணர்வுபூர்வமான எதிர்ப்பு மக்களிடம் பரவியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய விவகாரங்களில் தங்கள் குரலை உயர்த்தி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மக்களின் மனோநிலையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

எனவே, ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதில் அதிக அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் குறித்து ஏற்கெனவே தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, இத்தகைய பின்னணியில், இலங்கை அரசுக்கு எதிரான தமிழக மக்களின் எதிர்ப்புணர்வை அனுசரித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்களோ, அதிகாரிகளோ, நடுவர்களோ பங்கு பெறக் கூடாது என்பதுதான்.இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago