முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாடி.மா.இராசு தாயார் இராமம்மாள் மறைவு: முதல்வர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - அண்ணா தொழிற்சங்க பேரவைத்தலைவர் தாடி.மா.இராசுவின் தாயார் இராமம்மாள் மறைவுக்கு  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது:-

அண்ணா தொழிற்சங்கப்பேரவைத் தலைவரும், சென்னை மாநகராட்சி 98-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தாடி.மா.இராசு அவர்களுடைய தாயார் எம்.இராமம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தாடி.மா.இராசு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்