முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் சண்டை

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

நாம்பென்(கம்போடியா),ஏப்.25

தாய்லாந்து ராணுவத்துக்கும், கம்போடிய ராணுவத்துக்கும் இடையிலான சண்டை இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

எல்லையை ஒட்டியுள்ள கம்போடிய பகுதியில் உள்ள ஆலயத்தை தனதாக்கி கொள்ள தாய்லாந்து ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு நடந்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினை காரணமாக இரு நாட்டு ராணுவத்தினரிடையே கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து மோதல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4 நாட்கள் தொடர்ந்து மோதல் நீடித்தது. இதற்கு பிறக நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கம்போடியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை உலக புராதன சின்னமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதை கைப்பற்ற தாய்லாந்து முயற்சிக்கிறது. இதனால் அடிக்கடி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்