முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, மார்ச். 27 - நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் 3 போட்டியும் டிரா ஆனதால்         தொடரும் டிராவில் முடிந்தது. 

ஆக்லாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ் டில் நியூசிலாந்து அணிக்கு நல்ல வெற் றி வாய்ப்பு இருந்தது. கடைசி கட்டத்தி ல் நியூசி.யின் பந்து வீச்சு எடுபடவில் லை. இதனால் ஆட்டம் டிரா ஆனது. 

இங்கிலாந்து அணி தரப்பில் பிரையர், இக்கட்டான தருணத்தில் சதம் அடித்து அணியை தோல்வியில் இருந்து மீட்டார். முன்னதாக பெல் நன்கு ஆடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றி னார். இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்து ஆட்டம் டிரா ஆக உதவினர். 

அந்த அணியின் கடைசி விக்கெட் ஆடி க் கொண்டு இருந்த போது 5-வது நாள் ஆட்டம் முடிந்ததால் இந்தப் போட்டி டிரா ஆனது. 

நியூசிலாந்து மற்றும் இங் கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆக்லா ந்து நகரில் உள்ள ஈடன் பார்க்கில் கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசி. அணி 443 ரன்னை எடுத் தது. அந்த அணி தரப்பில், புல்டான் 136 ரன்னும், வில்லியம்சன் 91 ரன்னும், செளதீ 44 ரன்னும், மெக்குல்லம் 38 ரன்னு ம், பிரவுன்லி 36 ரன்னும், ரூதர்போர்டு 37 ரன்னும், கீப்பர் வாட்லிங் 21 ரன்னு ம் எடுத்தனர். 

பின்பு ஆடிய இங்கிலாந்து அணி நியூசி. .யின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 204 ரன்னில் சுருண்டது. இதில் கீப்பர் பிரையர் 73 ரன்னும், ஜோ ரூட் 45 ரன்னும், டிராட் 27 ரன்னு ம், பெல் 17 ரன்னும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

நியூசி. அணி தரப்பில் முதல் இன்னிங் சில் சதம் அடித்த புல்டான் இந்த இன் னிங்சிலும் சதம் அடித்தார். அவர் 110 ரன் எடுத்தார். தவிர, கேப்டன் மெக்கு ல்லம் 67 ரன்னையும், பிரவுன்லி 28 ரன் னையும், கீப்பர் வாட்லிங் 18 ரன்னையு ம் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 481 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை நியூசி. அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் னை எடுத்து இருந்தது. 

அப்போது 5-வது நாள் ஆட்டம் முடிவு க்கு வந்ததால் இந்தப் போட்டி டிரா ஆனது. இதனால் 3 போட்டிகள் கொ  ண்ட இந்தத் தொடர்  0 - 0 என்ற கணக் கில் முடிந்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் கீப்பர் பிரையர் 182 பந்தில் 110 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். பெல் 271 பந்தில் 75 ரன் எடு த்தார். தவிர, கேப்டன் குக் 43 ரன்னையு ம், டிராட் 37 ரன்னையும், ஜோ ரூட் 29 ரன்னையும், எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், பகுதி நேர பந்து வீச்சாளரான வில்லியம்சன்  44 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடு த் தார். தவிர, வாக்னர் ,செளதீ தலா 2 விக்கெட்டும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்