முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தூதரை திருப்பி அனுப்ப வேண்டும்: தா. பாண்டியன்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

கடலூர், மார்ச்.28 - இந்தியாவில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயலும் இலங்கை தூதரை திருப்பி அனுப்ப வேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 

இது தொடர்பாக கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறியதாவது:-

டெல்லியில் இலங்கை தூதர் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, வட இந்தியர்கள் தங்களை ஆதரிப்பதாகவும், தென்னிந்தியர்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டு குழப்பத்தை உருவாக்குவது போல அவர் பேசியிருப்பது அத்துமீறிய செயல். 

இந்திய அரசு அவரை அழைத்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவரை, அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அதுபோல சென்னையில் உள்ள துணை தூதரக அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும். இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்க வேண்டும். 

தமிழக அரசு விழிப்போடும் உணர்வு பூர்வமாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் எந்த வகையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago