முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: அமைச்சர்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

கரூர், மார்ச். 28 - கரூர் மாவட்டத்தில் உள்ள 203 வருவாய் கிராமங்களில் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  கரூர் மாவட்டம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் மக்களை தேடி வருவாய்த் துறை அம்மா திட்டத்தில் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான தீர்வுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், 

தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மக்களை தேடி வருவாய்த் துறை அம்மா திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டா மாறுதல், குடும்ப அட்டை வேண்டி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற வருவாய் கிராமங்கள் தோறும் குழுக்கள் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அன்றே தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்காக கரூர், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி வட்டங்களில் வட்டாட்சியர் தலைமையில் தலா 2 குழுக்களும், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டங்களில் தலா ஒரு குழுவும் செயல்படவுள்ளது. இந்த 8 குழுக்களும் கரூர் மாவட்டத்தில் உள்ள 203 வருவாய் கிராமங்களில் 6 மாத காலத்திற்குள் திட்டமிட்டபடி செயல்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கப்படவுள்ளது. ஆத்தூர், பூலாம்பாளையம் ஊராட்சியில் 282 மனுக்கள் பெற்று தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

203 வருவாய் கிராமங்களுக்கும் குழுவினர் செல்லும் விபரம் வாரந்தோறும் நாளிதழ்களில் செய்தியாக வெளிவரும். பொதுமக்கள் இதனை அறிந்து அன்றைய தினம் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago