நம் நாட்டை குழப்ப சதி நடக்கிறது: ராஜபக்சே

புதன்கிழமை, 27 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 28 - இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை குழப்ப உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி சூழ்ச்சிகள் நடப்பதாக அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இலங்கை சுதந்திர கட்சியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது, 

போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். போர் நடந்த போது அரசுக்கு எதிராக பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன. தற்போது நாட்டை குழப்ப சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆளும் சுதந்திர கட்சி எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: