முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பளம், படிகள் மற்றும் தகுதிகள் அனைத்தையும் இழப்பதாக உத்தரவிட்டால் அத்தகைய எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனாலும் இது குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ஜூலையில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியும். ஆனால், சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதில் பாதிப்பு ஏற்படும்.

ஒரு எம்.எல்.ஏ.வுக்கு சம்பளமாக ரூ.8 ஆயிரமும், ஈட்டுப்படியாக ரூ.7 ஆயிரமும், தொலைபேசி படியாக ரூ.5 ஆயிரமும், தொகுப்புப் படி, தொகுதி மற்றும் தபால் படிகளாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

வாகனப்படியாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்படுகிறது. ரயிலில் ஏ.சி. இரண்டு அடுக்குக்கான கட்டணம், தினப்படி ரூ.500, ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்பப் பெறலாம். எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. விடுதி வாடகை நாள் ஒன்றுக்கு 2 ரூபாய் 50 காசு. தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸுடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம் என்பன உள்ளிட்ட சலுகைகள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்