முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 28 - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று புதன்கிழமை தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 1/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவிகள். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதுபவர்கள். இவர்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னையில் 233 மையங்களில் 58,436 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதினார்கள். தேர்வுக்கு முன் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கும்பல் கும்பலாக அமர்ந்து கடைசி நேர படிப்பில் ஈடுபட்டனர். பின் பிரார்த்தனை நடந்தது. அவரவர் வகுப்பு ஆசிரியர்கள் அவர்களை வாழ்த்தி நன்கு தேர்வு எழுதும்படி ஊக்கப்படுத்தினர். தேர்வு அறைக்குச் செல்லும் முன் அவர்களிடம் பிட் ஏதாவது உள்ளதா என்றும் சோதிக்கப்பட்டனர். இதனால் பல மாணவ, மாணவியர் பதட்டத்துடனேயே இருந்தனர். பின்னர் உற்சாகமாக தேர்வு எழுதினர்.

தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்.

தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தனியாக சிறப்பு பறக்கும் படைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்