முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்ஸ் அபாரம் சரிந்தது சங்ககாரா அணி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஏப்.- 25 - ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியது. ஐ.பி.எல். தொடரின் 27-வது போட்டி நேற்று ஐதராபாத்தின் ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சச்சின் தலைமையிலான பலம்மிகுந்த மும்பை இந்தியன்ஸ் அணியும்,  சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சாய்பாபா மரணம் காரணமாக இந்த போட்டியில் அவரது தீவிர பக்தரான சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்தது. தனது 38-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ள டெண்டுல்கர் நேற்றைய போட்டியில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக டாஸ் வென்ற சங்ககாரா மும்பை அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய டெண்டுல்கர் மற்றும் ஜேக்கப்ஸ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். மும்பை அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது ஜேக்கப்ஸ் 32 ரன்களில் இசாந்த் சர்மாவின் பந்தில் ஓஜாவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து அம்பதி ராயுடு களமிறங்கினார். இந்நிலையில் வேகப்பந்து வீச்சை விரட்டிய டெண்டுல்கருக்கு சுழல்பந்து வீசப்பட்டது. 28 ரன்களை எடுத்திருந்த டெண்டுல்கர், அமித் மிஸ்ராவீசிய பந்தில் ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8.2 ஓவர்களில் 70. அடுத்து போலார்டு களமிறங்கினார். இந்நிலையில் அமித் மிஸ்ரா டெண்டுல்கர் அவுட்டான அதே ஓவரிலேயே 7 ரன்களை எடுத்திருந்த ராயுடுவையும் அவுட்டாக்கினார். இப்போது கேட்ச் பிடித்தவர் தவான். இதனை அடுத்து ரோஹித் சர்மா களமிறங்கினார். இந்நிலையில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் போலார்டும், ஓஜாவின் பந்தில் சங்ககாராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 70 ரன்களிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில் ரோஹித்துடன் கூட்டு சேர்ந்தார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து விக்கெட்டை காப்பாற்றி விளையாடினர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 14.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரோஹித் சர்மா 33 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். 70 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைமணட்ஸ், ரோஹித் ஜோடி அணியை 172 க்கு கொண்டு சென்றது. இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை எடுத்தது. சர்மா ஆட்டமிழக்காமல் 56 ரன்களையும், சைமண்ட்ஸ் 44 ரன்களையும் எடுத்தனர். டெக்கான் தரப்பில் அமித் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஓஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

173 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கியது டெக்கான் சார்ஜர்ஸ். அந்த அணியின் துவக்க வீரர்ககள் சோஹல் மற்றும் தவான் ஆட்டத்தை துவக்கினர். அணியின் ஸ்கோர் 14 ஆக இருந்தபோது சோஹல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அணித்தலைவர் சங்ககாரா களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இந்நிலையில் 6 வது ஓவரை மலிங்கா வீசினார். இதில் நன்கு ஆடிக்கொண்டிருந்த தவான் கிளீன்போல்டு முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன்கள் 25. அடுத்து களமிறங்கிய கேமரான் ஒயிட் ஒரு ரன்னை மட்டும் எடுத்த நிலையில் மலிங்காவால் அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது டெக்கான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்திருந்தது. சிப்லி அடுத்து சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். இவரும் அதிகம் சோபிக்கவில்லை. இவர் 6 ரன்களை மட்டும் எடுத்து போலார்டின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கிறிஸ்டியன், சங்ககாராவுடன் ஓரளவு ரன்களை சேர்த்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 93 க்கு வந்தபோது 34 ரன்களை எடுத்திருந்த சங்ககாரா, ரசித் மலிங்காவின் வேகத்திற்கு இரையானார். இதனால் 13.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் என தத்தளிக்க ஆரம்பித்தது டெக்கான். இதையடுத்து கிறிஸ்டியன் 21, அமித் மிஸ்ரா 25  ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதனால் டெக்கான் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டும் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தான் கலந்துகொண்ட 6 போட்டிகளில் 5 ல் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆட்டநாயகனாக ரசித் மலிங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது மும்பை அணியில் விளையாடும் ரோஹித் சர்மா, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இருவரும் 3 வது ஐ.பி.எல். தொடரில் டெக்கான் அணியில் இருந்தவர்கள். இவர்கள் இருவரும்தான் தற்போது டெக்கான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago