கப்பல் மோதி மீனவர் பலி: 2 ஜெர்மன் மாலுமிகள் கைது

புதன்கிழமை, 27 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

சென்னை, மார்ச்.28 - சென்னை அருகே கப்பல் மோதி இரண்டு மீனவர்கள் பலியானது தொடர்பாக 2 ஜெர்மனி மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளன. சென்னை அருகே இந்தியக் கடல் எல்லைப் பகுதியில், வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் சென்னை மீனவர் ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்தக் கப்பலில் இருந்த 2 ஜெர்மன் நாட்டு மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளளனர். மார்ச் 16ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 18.5 கி.மீ தொலைவில் ஆன்டிகுவா பார்படா நாட்டுக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் ஒன்று, சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் படகில் மோதியதில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்ற மீனவர் கடலுக்குள் மூழ்கினார். அவருடன் சென்ற மற்ற இருவரும் மீட்கப்பட்டனர். எம் வி கிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த கப்பலை ஓட்டி வந்த ஆல்பிரட் உல்ஸ்கோங், ஸ்டீபன் ஹிங்க்சாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சரக்குக்கப்பலின் அடிப்பகுதியை சோதனையிட்டதில் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், சுழ்ைநிலை சாட்சிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர். சென்னை நீதிமன்றம், இவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்துகொண்டு விசாரணை முடியும்வரை நாட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற உத்தரவின் பேரில், இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: