முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி பேரன் அணியில் இலங்கை வீரர்கள்: முதல்வர் கேள்வி

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 28 - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கூறும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது பேரன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரட்டை முகம்? என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்..

சட்டசபையில் இதுகுறித்து முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க உள்ள அணிகளில் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழுமத்தின் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியும் ஒன்று என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த அணியின் தலைவரே இலங்கை நாட்டைச் சேர்ந்த குமார் சங்ககாரா. இவரைத் தான் அணியின் தலைவராகவே கருணாநிதியின் பேரனுக்குச் சொந்தமான சன் குழுமம் தேர்ந்தெடுத்துள்ளது. இலங்கை நாட்டைச் சேர்ந்த திசாரா பெரேரா என்ற மற்றொரு வீரரும் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார். இதை எப்படி கருணாநிதி அனுமதிக்கிறார்? ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்காக உருகுவது போல் தோற்றத்தை உருவாக்குவது; மறுபக்கம் தமிழர்களை அழித்த இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனும் உறவைத் தொடர்வது, டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் கருணாநிதி, தன் குடும்ப கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து வாய் திறக்காமல் இருப்பது சுயநலத்தின் உச்சகட்டம். ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த இரட்டை முகம்? கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்துதான் வைத்துள்ளார்கள்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்