முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் காங்.,- தமிழீழ மாணவர் அமைப்பினர் மோதல்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

திருச்சி, மார்ச் 28 - திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த உள்ள“ட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் காங்கிரசார் ஞானதேசிகனை வரவேற்று பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் வைத்தும், ஏராளமான காங்கிரஸ் கொடியும் கட்டியிருந்தனர். 

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு ஞானதேசிகன் எம்.பி., கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருவதாக இருந்தது. இதையடுத்து அவரை வரவேற்க மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.  அப்போது எங்கிருந்தோ வந்த தமிழீழ மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 7 பேர் தாங்கள் கைகளில் வைத்திருந்த கட்டைகள“ல் அரிஸ்டோ ரவுண்டானாவில் கட்டப்பட்டிருந்த காங்கிரஸ் பேனர்களை அடித்தும், கிழித்தும் சேதப்படுத்தினர். மேலும் காங்கிரஸ் கொடிகளையும் கிழித்து எறிந்தனர். 

இதைப்பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை தாக்க கையில் உருட்டு கட்டைகளுடன் பாய்ந்து வந்தனர். இதையடுத்து அவர்களுக்கிடையே பயங்கர மோதல் உருவானது. பின்னர் அந்த மாணவர்கள் 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்களை தடுத்த போலீசார் திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை விட்டு விட்டு எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . பின்னர் அதுவே தள்ளு முள்ள“க மாறியது. 

இதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் செய்தனர். இதனால் அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியது. சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

அப்போது அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், பெரியய்யா ஆகியோருடன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. 

தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago