முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 2 ம் தேதி முதல் விண்ணப்பம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 25 - பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேரும் வகையில் பி.வி.எஸ்.சி. உள்ளிட்டவற்றுக்கு வரும் 2 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  2011 - 12 கல்வி ஆண்டில் பி.வி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வரும் 2 ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 7 ம் தேதியாகும். சென்னை வேப்பேரி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடியில் உள்ள மீன்வள கல்லூரி, மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 3 வது வாரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக் கழக இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் ஜூலை 13, 14 ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்