பாகிஸ்தானியர் கொலை: ஏமன் வாலிபரின் தலை துண்டிப்பு

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

சவுதி, மார்ச். 29 - சவுதி அரேபியாவில் ஒரு பாகிஸ்தானியரை கொன்றதற்காக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிலுவையில் அறையப்பட்டது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பாஸ்தே செய்யது கான் என்பவரை ஓமனைச் சேர்ந்த முகம்மது ரஷாத் கைரி ஹுசைன் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ்ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு ஹுசைன் கானை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜிசான் நகரில் ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சிலுவையில் அறையப்பட்டுள்ளது. சவுதியில் ஹுசைனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 28 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சவூதியில் மொத்தம் 76 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: