தமிழர் பகுதிக்குள் ஊருடுவும் சீனா: நூலகத்திற்கு உதவி

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

யாழ்ப்பாணம், மார்ச். 29 - இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதிகளைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங்கையில் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி,கம்யூட்டர், ஜெராக்ஸ் இயந்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.

யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செயலாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங்கினார்.

சிங்களர்கள் வாழும் பகுதியில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத்தினை வளர்த்துக் கொண்டுள்ளது. இந்த நாட்டைத் தான் இந்தியாவின் நண்பன் என்கிறது மத்திய அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்: