முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணை விவகாரம்: சீன அதிபருடன் பிரதமர் விவாதம்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

டர்பன்,மார்ச்.29 - பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா 3 அணைகளை கட்டி வருகிறது. இதற்கு அந்த நாட்டு புதிய அதிபர் ஜின்பிங்கிடம்ம் பிரதமர் மன்மோகன் சிங் கவலையை தெரிவித்தார். இமயமலையில் இருந்து பிரமபுத்திரா ஜீவநதி உற்பத்தியாகி அசாம் மாநிலத்தின் வழியாக வங்கதேசம் சென்று வங்கக்கடலில் கலக்கிறது. இந்த நிதிக்கு மேலே சீனாவின் பகுதியும் கீழ்பகுதியில் இந்திய பகுதியும் இருக்கிறது. இந்தநிலையில் மேல்பகுதியில் அதாவது சீனாவானது தனது எல்லைப்பகுதியில் பிரமபுத்திரா நதிக்கு குறுக்கே 3 ஆணைகளை கட்டுகிறது. இதனால் மழை இல்லாபோதும், கோடைகாலத்திலும் நதி வறண்டுவிட்டால் இந்தியாவில் பாசன பகுதியை மட்டுமல்லாது குடிநீர் பிரச்சினையும் வரலாம் என்று இந்தியா கருதுகிறது.
இந்த விஷயத்தை சீன நாட்டு புதிய அதிபர் ஜின்பிங்கிடம் ஜாங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துரைத்து இந்தியாவின் கவலையை தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஜிங் பிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் இந்த கவலையை தெரிவித்தார். இதற்கிடையில் இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைப்பிரச்சினையானது சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் அதை தீர்க்க காலதாமதமாகும். அதனால் இருநாடுகளிடையே இருதரப்பு உறவையும் வர்த்தகத்தையும் அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது சீனாவுடனான இந்திய வர்த்தகம் குறைவாக இருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கி, அதை போக்க இந்தியாவில் இருந்து இறக்குமதியை சீனா அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சீன தென்கடல் பிரச்சினை குறித்து இருவரும் விவாதிக்கவில்லை என்று தெரிகிறது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த ஜின்பிங் மிகவும் விருப்பமாக இருப்பதாக தெரிகிறது. அதேசமயத்தில் திபெத் விவகாரம், தலாய்லாமா விவகாரம் குறித்தும் அவர்கள் பேசவில்லை என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்