முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச தொடர்: ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமனம்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 29 -  வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள்         தொடருக்கான இந்திய மகளிர் அணியி ன் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நிய மிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்ததைத் தொடர் ந்து மிதாலி ராஜ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். 

வங்கதேச மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிற து. இந்தத் தொடர் அடுத்த மாதம் 2-ம் தேதி துவங்குகிறது. 

இந்திய மகளிர் அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையே 3 டி - 20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொ  ண்ட தொடர் நடக்க இருக்கிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தொடருக்காக அகில இந்திய மகளிர் தேர்வுக் குழுவினர் 15 வீராங்க னைகள் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்தனர்.

ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் மூத்த வீராங்கனையும், கேப் டனுமான மிதாலி ராஜ் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் சிற ந்த மட்டை வீச்சாளரும் ஆவார். 

இந்திய அணியின் துவக்க வீராங்கனையான பூனம் ரவுத் இந்தத் தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இந்திய அணி : -

ஹர்மன்பிரீத்கவுர் (கேப்டன்), பூனம் ரவுத் (துணைக் கேப்டன்), எம்.டி.திரு ஷ்காமினி, ஸ்மிருதிமந்தனா,அனகா டெஸ்பாண்டே, ஸ்னேகா தீப்தி, மொ  னாமெஸ்ரம், என் . நிரஞ்சனா, அர்ச்ச னாதாஸ், பூனம்யாதவ்,ரிடு துருவ், ஸ்வாகாதிகாராத், சுபலட்சுமிசர்மா, சுஷ்மா வர்மா மற்றும் எக்தா பிஸ்த் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்