முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உல்பா தீவிரவாதிகள் செலவுக்கு தினமும் மத்திய அரசு ரூ.40 லட்சம் கொடுக்கிறது

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 25 - உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகளின் குடும்பத்தார்கள் செலவுக்கு மத்திய அரசு தினமும் ரூ. 40 லட்சம் கொடுக்கிறது.  அசாம் மாநிலத்தில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் உல்பா தீவிரவாத அமைப்பு பெரியது. இந்த அமைப்பானது அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. அதனால் தற்போது அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. உல்பா தீவிரவாதி அமைப்பானது பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து இருப்பதால் தவறான வழியில் பணம் ஈட்டுவதை கைவிட்டுள்ளது. அதனால் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப செலவுக்கு மத்திய அரசு தினமும் ரூ.40 லட்சம் வழங்கி வருகிறது. இந்த பணம் அசாம் மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உல்பா அமைப்பு தலைவர் அரபிந்தா ராஜ்ஹோவா,துணைத்தலைவர் பிரதீப் கோகாய் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள், உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 400 பேர் இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த தொகை அவர்களுக்கு தகுதிக்கு தகுந்தவாறு பிரித்துக்கொடுக்கப்படுகிறது. உல்பா தீவிரவாதிகள் மக்களை மிரட்டி பணம் திரட்டினர். மேலும் அண்டை நாடான வங்கதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது. தற்போது அதை அவர்கள் கைவிட்டுவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்