முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் ப.சிதம்பரம்: மதுரை-துபாய் விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கை

சனிக்கிழமை, 30 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

துபாய்: மார்ச் - 31 - துபாய் வந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து துபாய் -மதுரை விமான சேவையை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்தார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவரை அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சந்தித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மதுரை - துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வருவதாக அவர்கள் ப.சிதம்பரத்திடம் எடுத்துரைத்தனர். அதைக் கேட்ட ப.சிதம்பரம், இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி தேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார். இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நன்றி கூறிய நெல்லை எஸ்.எஸ்..மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்தியாவின் சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சந்திப்பின்போது, அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான் ்மான் அமைப்பின் விழா செயலர் ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்