முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் கொச்சி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

ஜெய்பூர், ஏப். 26 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை எளிதாக தோற்கடித்து முன்னி லை பெற்று உள்ளது. 

குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், வாட்சன் மற்றும் டிராவிட் இருவரும் அபாரமாக பே ட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின போது, கேப்டன் வார்னே மற்றும் திரிவே தி இருவரும் நன்கு பந்து வீசி கொச்சி அணியின் ரன் ரேட்டைக் கட்டு ப்படுத்தினர். ஏ. சிங் மற்றும் போத்தா இருவரும் அவர்களுக்கு பக்க பலமாக பந்து வீசினர்.

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் 28 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும், கேப்டன் வார்னே தலைமையிலான ரா ஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. கொச்சி அணி தரப்பில் ஜெயவர்த் தனே மற்றும் லக்ஷ்மண் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணி ராஜஸ்தான் அணியின் பெள லிங்கை சாமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 109 ரன்னில் சுருண்டது. 

கொச்சி அணி தரப்பில், கீப்பர் படேல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடே ஜா இருவரும் சிறிது தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

பார்திவ் படேல் அதிகபட்சமாக, 34 பந்தில் 32 ரன்னை எடுத்தார். இதி ல் 2 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர், வார்னே வீசிய பந்தில் கீப் பர் யாக்னிக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். 

அடுத்தபடியாக ஜடேஜா 23 பந்தில் 22 ரன்னை எடுத்தார். இதில் 2 பவு ண்டரி அடக்கம். தவிர, ஜெயவர்த்தனே 13 ரன்னையும், லக்ஷ்மண் மற் றும் ஹாட்கே ஆகியோர் தலா 8 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில், வார்னே 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். திரிவேதி 19 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஏ. சிங் மற்றும் போத்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்த னர். 

ராஜஸ்தான் அணி 110 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொச்சி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்னை எடுத்தது. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 35 பந்து மீத மிருக்கையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற து. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில் வாட்சன் 40 பந்தில் 49 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். டிராவிட் 37 பந்தில் 44 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவி ர, போத்தா 14 ரன்னை எடுத்தார். 

கொச்சி அணி தரப்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜா 24 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மற்ற வீரர்கள் யாருக்கும் விக்கெட் கிடைக்கவி ல்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வார்னே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்