முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பூகம்பம் - தேடும் பணியில் 25 ஆயிரம் ராணுவவீரர்கள்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஏப்.26 - ஜப்பானில் நடந்த பூகம்பத்தால் பலியானவர்களின் உடலை தேடும் பணியில் 25ஆயிரம் ராணுவவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தமாதம் 11ம் தேதி நடந்த பூகம்பத்தை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.இந்த பூகம்பத்தில் 14,300 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் 12 ஆயிரம் பேர் காணவில்லை. அவர்களும் இதில் பலியாகி இருப்பார்கள் என்று கருதப்படுவதால் அவர்களை தேடும் பணியில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றி பலியான உடல்கள் சிதறிக்கிடக்கின்றனவா என்று தேடி வருகின்றனர். மேலும் 90 ஹெலிகாப்படர்கள் பயன்படுத்தப்பட்டன. சுனாமியால் பலியானவர்களின் உடல்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டு 50 படகுகள் மூலம் கடலுக்குள் 20 கி.மீ. தொலைவிற்கு சென்று தேடிவருகின்றனர். 

இந்த தேடுதல் பணியில் ஜப்பான் ராணுவ வீரர்களுடன் போலீசார், கடல்பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் அமெரிக்க படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்கலை தவிர பூகம்பம் மற்றும் சுனாமியால் பலியான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றின் உடல்களையும் தேடும் பணியில் வேளாண் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேடுதல் பணி தங்களுக்கு சவாலானதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இப்போ மேயமா தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் உடலை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்