முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு தென் கொரியா கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

சியோல்,ஏப்.2 - எங்கள் பிராந்திய பகுதியில் வடகொரியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று தென்கொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரியா தீபகற்பகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா படைகள் குவிக்கப்பட்டிருப்பதோடு போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளன. வடகொரியாவும் அமெரிக்க ராணுவதளங்களை நோக்கி ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது. எங்கள் நாட்டு மீது அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத போராக முடியும் என்று வடகொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி வடகொரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கிடையில் வடகொரியாவுக்கு தென்கொரியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.  எங்கள் எல்லைப்பகுதியில் ஒரு சிறு துப்பாக்கி குண்டு வெடித்தாலும் அதை போராக கருதி வடகொரியாவை பயங்கரமாக தாக்குவோம் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா எல்லையை மீறி ஒரு சிறு அத்துமீறலில் ஈடுபட்டாலும் பயங்கரமாக எதிர் தாக்குதலை நடத்துவோம் என்று நேற்று சியோலில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் அதிபர் பார்க் ஜியூன் ஹை தெரிவித்தார். வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் அதாவது அதிபரின் அனுமதி இல்லாமலேயே உடனடியாக வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு ராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஹை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்