முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்: ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருக்கு சம்மன்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,  ஏப்ரல் 1 - காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில்  நடைபெற்ற  முறைகேடு  தொடர்பாக ஸ்விட்ஸர்லாந்து  நிறுவனத்தைச் சேர்ந்த  மூவருக்கு சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது என சிபிஐ தெரிவித்திருக்கிறது. 2010  - ஆம் ஆண்டு டெல்லியில்  நடைபெற்ற  காமன்வெல்த் 

விளையாட்டுப் போட்டிகளில்  நேரம்,  ஸ்கோர்,  முடிவுகள்  (டி.எஸ்.ஆர். சிஸ்டம்)  அறிவிக்கும்  எலக்ட்ரானிக்  ஸ்கோர்  போர்டுகள்  வாங்குவதில்  அரசுக்கு  ரூ.95 கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக  சிபிஐ விசாரணை நடைபெற்றது.  இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில்  ஸ்விஸ் டைமிங்  நிறுவன அதிகாரிகளின்  விசாரணை எந்த நிலையில்  உள்ளது என்று  நீதிமன்றத்தில்   சிபிஐ  அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.  ஸ்விஸ் அதிகாரிகள் ஜூலை 2 ​- ஆம் தேதி   விசாரணைக்கு  ஆஜராக வேண்டுமென்று  அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 1989 ​- ஆம் ஆண்டு  இந்தியாவுக்கும் ஸ்விட்ஸர்லாந்துக்கும் இடையே  ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்   ஜெர்மன்  மொழியில்  இந்த சம்மன்  அனுப்பப்பட்டது. விசாரணை தேதிக்கு ஒரு மாதம் முன்பு ஸ்விஸ் நீதி - காவல் துறைக்கு  இந்த சம்மன்  கிடைக்க வேண்டும். அப்போதுதான்  அது குறித்த  தொடர் நடவடிக்கையை ஸ்விஸ் காவல்துறை எடுக்க  இயலும் என்று  சிபிஐ தாக்கல் செய்துள்ள  விசாரணை  நிலை அறிக்கையில்  

தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நிறுவன மொன்று ரூ. 62 கோடிக்கு இதே போன்ற டி.எஸ். ஆர். சிஸ்டம் ஸ்கோர் 

போர்டுகளை அளிக்க  முன்வந்தபோதிலும்,  கூடுதல் தொகை அளித்து  ஸ்விஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 

இந்த முறைகேட்டில்  முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி  உள்ளிட்ட  பல்வேறு நபர்களின்  மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago