ரூ.1.81 லட்சம் கோடி கடன்: கொடுத்தது ரிசர்வ் வங்கி!

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப். 3 - நிதி ஆண்டின் கடைசி நாளான மார்ச் 31 ம் தேதி மட்டும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 1.81 லட்சம் கோடி கடனாக வங்கிகள் பெற்றிருக்கின்றன. பொதுவாக வங்கிகள் தங்களுக்கான நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றுக் கொள்வது வழக்கம். நடைமுறையில் வங்கிகளின் முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 6.5 சதவீதம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து நீண்டகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம்.என இருந்து வருகிறது.

2012-13 ம் நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் மார்ச் 31 ம் தேதியன்று மட்டும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற நாட்களைப் போல் இல்லாமல் ஒரே நாளில் அதிக தொகையை வங்கிகள் கடன் வாங்கியிருக்கின்றன. மார்ச் 31  ம் தேதியன்று மட்டும் ரூ. 1.81 லட்சம் கோடியை கடனாக வங்கிகளுக்குக் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதில் குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ரூ. 7 ஆயிரம் கோடியை வங்கிகள் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: