முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூச்சிக் கொல்லி மருந்துக்கு தடை கோரி அச்சுதானந்தன் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.26 - கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க விவசாயிகளுக்கு புதுவித பூச்சிக் கொல்லி மருந்து விநியோகிக்கப்பட்டது. இந்த மருந்து பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட பின்னர் விவசாயிகள் பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது பூச்சிக் கொல்லி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பே அவர்களின் உடல் நலக் குறைவுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. 

இதையடுத்து கேரள சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீமதி தலைமையில் அதிகாரிகள் குழு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தனர். அப்போது பூச்சிக் கொல்லி மருந்தை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருவனந்தபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். 

அதன்படி திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் கேரள மந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். விவசாயிகளையும், கேரள மக்களையும் பாதிக்கும் பூச்சி கொல்லி மருந்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். அச்சுதானந்தனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபாலும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago