முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தேர்தல்: பழங்குடியின பெண்கள் வேட்பு மனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப். 3 - பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிடுவதற்காக முதன் முறையாக 2 பழங்குடியின பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 11 ம் தேதி நடைபெற உள்ளது. பஞ்சாப், சிந்த், கைபர், பக்துன்குவா, பலூசிஸ்தான் ஆகிய 4 மாகாண சபைகளுக்கும் இதே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. 342 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 2 தொகுதிகளில் பழங்குடியின பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பழமைவாத பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட மறுக்கும் பழங்குடியினத்தில் பிறக்கும் பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமை கூட அவர்களின் குடும்பத்தாரால் மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து 2 பழங்குடியின பெண்கள் எம்.பி.யாகும் ஆர்வத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பதாம் சரி என்ற பெண் பஜவுர் பழங்குடி மாவட்டத்தில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சியால் சீட் மறுக்கப்பட்ட அக்கட்சியின் லோவர் டிர் பழங்குடியின மாவட்ட துணை தலைவர் நுஸ்ரத் பேகம் லோவர் டிர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்