நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு: பிரதமர் கவலை

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 4  - நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதமாக குறைந்து வருவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங், 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது கவலை தரக் கூடியது. இது நமக்கு ஒரு தற்காலிக பின்னடைவுதான். சர்வதேச பொருளாதார மந்த நிலையும் இதற்கு காரணம். விரைவில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவோம்.

நேரடிய அன்னிய முதலீட்டு கொள்கையில் இறுக்கங்களை இன்னமும் தளர்த்த உள்ளோம். இதேபோல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் விவகாரங்கள், அதிகாரத் தலையீடுகள், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொண்டிருந்தாலும் இந்தியாவால் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.

அனைத்து பொருளாதார பிரச்சனைகளையும் இந்த நிதியாண்டில் சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் வளர்ச்சியடையும் வரை நாமும் பொறுமையாக இருக்க வேண்டும்.நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் இன்றி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: