முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து ராணி எலிசபெத் செலவுக்கு ரூ.296 கோடி..!

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இங்கிலாந்து, ஏப். 5 - இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் செலவினங்களுக்காக 2013,14 ம் நிதியாண்டுக்கு ரூ. 296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 42 கோடி அதிகம். 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு 86 வயதாகிறது. அந்நாட்டில் அரசு குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றை அந்நாட்டு அரசு பராமரித்து வருகிறது. அரண்மனைகள் மட்டும் ராணியிடம் உள்ளது. அரசின் பொறுப்பில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.65,600 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக, இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்து வந்தது.  ராஜ குடும்பத்தின் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து 15 சதவீதம் அளவுக்கு ஆண்டுதோறும் சம்பளமாக ராணிக்கு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் அளவுக்கு ராணியின் சம்பளமாக அளிக்கப்பட்டது. அதாவது ரூ. 254 கோடி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதில் இருந்து ரூ. 42 கோடி உயர்த்தப்பட்டு ரூ.296 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கும் இந்த தொகையில்தான், ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள், 300 ஊழியர்களின் சம்பளம், அரண்மனை பராமரிப்பு செலவு ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதால், அவரது பொறுப்புகளை இளவரசர் வில்லியம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்