முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு புகார்

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

பெங்களூர்,ஏப்.6 - கர்நாடக அமைச்சர் சோமண்ணா மீது சொத்துக்குவிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநில உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சராக இருப்பவர் சோமண்ணா, இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் இரண்டாவது முறையாக நேற்று புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்தாண்டு சமூக ஆர்வலர் சேட்டன் குமார் என்பவர் இதே போல் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் பின்னர் வாபஸ் வாங்கிவிட்டார். இப்போது வர்த்தகர் ராமகிருஷ்ணா என்பவர் லோக் ஆயுக்தா கோர்ட்டில் அதேபுகாரை பதிவி செய்து விசாரணை கோரியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள சோமண்ணா 1974-ல் ஜனதா பஜாரில் ஒரு சேல்ஸ்மேனாக இருந்தவர். ஆனால் 2010-க்குள் அவர் ரூ.18 கோடி சேர்த்துவிட்டார். எனவே இதுபற்றி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார் ராமகிருஷ்ணா. இதேகோர்ட்டில் சோமண்ணா மீது மற்றொரு புகாரும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago