முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜெண்டினாவில் வெள்ளம்: 54 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

லாப்பிளடா, ஏப். 6 - அர்ஜெண்டினாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக தலைநகர் பிவினெஸ் ஐரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 54 பேர் பலியானதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தினால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அர்ஜெண்டினாவில் கடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்ததில் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லாப்பிளடா நகரில் பெய்த மழையின் அளவு 40 செ.மீ. பதிவானது. இந்நகரில் மட்டும் 48 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தின் காரணமாக சாலைகளில் நின்ற கார்கள் முழுவதும் மூழ்கி காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகந்ததால் மரங்களின் மீதும், வீடுகளின் கூரைகள் மீதும் மக்கள் தஞ்சமடைந்தனர். சாலைகளில் உள்ள நீர் 2 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணியில் தீயணைப்பு படையினர், ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர். தலைநகரில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தொலை தொடர்பு சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் கிறிஸ்டியானா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்