முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா முன்னாள் அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பாலசோர்,ஏப்.6 - வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி கிட்டத்தட்ட 20 நாட்கள் சிறைவாசம் இருந்த ஒடிசா முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் மொகந்தியின் மகன் ராஜஸ்ரீ மொகந்திக்கு நேற்று பாலாசோர் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

ரூ.10 ஆயிரம் ரொக்க ஜாமீன் மற்றும் 2 நபர் ஜாமீன் என்கிற அடிப்படையில் ராஜஸ்ரீ மொகந்திக்கு மாவட்ட செசன்ஸ் நீதிபதி வி.ஜெயஸ்ரீ ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கு விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. கோர்ட்டு அனுமதி இன்றி மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஜாமீனை நீதிபதி ஜெயஸ்ரீ வழங்கியதாக ராஜஸ்ரீ மொகந்தியின் வழக்கறிஞர் நிரஞ்சன் பாண்டா தெரிவித்தார். முன்னதாக இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது சில ஆவணங்களை இணைக்க பாண்டா அவகாசம் கேட்டதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தது. அப்போது ஜாமீன் வழங்கப்பட்டது. தனது மனைவியை சித்ரவதை செய்ததாக ராஜஸ்ரீ மொகந்தி கடந்த மார்ச் 17-ம் தேதி கைது செய்யப்பட்டு மறுநாள் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவருக்கும் இவரது மனைவி பார்சாவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. 

இதனிடையே கடந்த மார்ச் 14-ம் தேதி பாலசோர் காவல்நிலையத்தில் மனைவி பார்சா ஒரு புகார் கொடுத்தார். அதாவது தனது கணவரும் அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தாரும் தன்னிடம் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜஸ்ரீயின் தந்தையும் ஒடிசா மாநில சட்ட அமைச்சருமான ரகுநாத் மொகந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு இவரும், இவரது மனைவியும் தலைமறைவானார்கள். கடந்த 30-ம் தேதி இவர்கள் இருவரும் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். பிறகு இவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இவர்களது மகனுக்கு நேற்று ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்