முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் குற்றவாளிக்கு விபரீத தண்டனை

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

சவுதி, ஏப். 6  - சவுதி அரேபியாவில் பத்துவருடங்கள் முன்னர் செய்த தண்டனைக்கு தீர்ப்பாக, குற்றவாளிக்கு பதிலுக்கு பதில் முடக்குவாதம் ஏற்படுத்த விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரியால் பணத்தை அவரது குடும்பத்தினர் அபராதமாக அளிக்க இயலாத பட்சத்தில் இந்த தண்டனை நிறைவேற்றப்படுமாம். 

சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் செய்த ஒரு தவறுக்காக 10 வருடங்கள் சிறைத் தண்டனையினை அனுபவித்து வருகிறார் அல்-கவாஹர் என்ற இளைஞர் . அவரது குடும்பத்தினர் ஒரு மில்லியன் சவுதி ரியால் பணத்தை (1,76,000 யுரோ) பாதிக்கப்பட்டவருக்கு அளிக்காத பட்சத்தில், அவருக்கு செயற்கையாக முடக்கு வாதம் ஏற்படுத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்க வைக்கப்படும் அவலநிலை ஏற்படவுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 

அலி அல்-கவாஹர் என்ற 24 வயது இளைஞர் பத்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் செய்த குற்றம், தனது நண்பர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமுற்ற அவர், கத்தியால் நண்பரின் முதுகுத் தண்டு வடத்தில் தாக்கியுள்ளார். இதில், அந்த நண்பருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு, நடமாட முடியாத நிலை வந்துவிட்டது. பதிலுக்கு அதே போன்ற நிலையை அல்-கவாஹருக்கு ஏற்படுத்த தீர்ப்பு விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகளின் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் துணை இயக்குனர் ஆன் ஹாரிஸன், ஒரு நபரை முடக்குவாதத்தில் தள்ளுவது என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அவருக்கு விதிக்கப்படும் கடுமையான துன்புறுத்தல் என்கிறது. கவாஹரின் 60 வயது தாயார் , என் மகன் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், என்னிடம் 2 மில்லியன் ரியால் சமரசத்துக்கான இழப்பீடாகக் கேட்டார். எங்களால் அவ்வளவு இயலாது என்றதும் ஒரு மில்லியன் ரியால் என குறைக்கப்பட்டது. ஆனால், எங்களிடமோ அதில் 10 ல் ஒரு பங்கு பணம் கூட கிடையாதுா என கூறியுள்ளார். 

மேலும் இந்த இளைஞனுக்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் ரத்தத்துக்காக பணம் என்ற இதன் கோட்பாட்டுக்காக பணத்தைத் திரட்ட முயன்று வருகிறார். ஆனால், எத்தனை தூரம் அது சாத்தியம் என்று தெரியவில்லை. அதுவும் கவாஹரின் தண்டனை நிறைவேற்றப்படும் முன் அது நடக்குமா என்றும் தெரியவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்