முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

108 பேருக்கு பத்ம விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 6  - நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். முன்பே கூறியது போல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.  அறிவியல் விஞ்ஞானிகள் பேராசிரியர் யஷ்பால் ரோத்தம், நரசிம்மா உள்பட 4 பேர் பத்ம பூஷன் விருதுக்கென தேர்வு செய்யப்பட்டார்கள். தயாரிப்பாளர் டி.ராமநாயுடு, பாடகி எஸ்.ஜானகி, நடிகை சர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, மறைந்த பாடகர் ஜஸ்பால்சிங் பட்டி, தமிழகத்தை சேர்ந்த ராமமூர்த்தி தியாகராஜன், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்பட 24 பேர் பத்மவிபூஷன் விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, லட்சமி நாராயணா சத்யராஜூ, எஸ்.கே.எம்.மலியானந்தன், தொழில் அதிபர் ராஜ்ஸ்ரீபதி, பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் உள்ளிட்ட 80 பேருக்கு அவரவர் சார்ந்த துறைகளுக்கான பத்மஸ்ரீ விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர். இந்த விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகைளில் நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, ஜஸ்பால்பட்டி சார்பில் அவரது குடும்பத்தி னர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். நடிகை ஸ்ரீதேவி, டிராவிட் உள்ளிட்டோர் நேரில் வந்து ஜனாதி பதியிடம் விருதை பெற்றுக் கொண்டனர்.

தனக்கு உரிய நேரத்தில் வழங்காமல் தாமதமாக பத்மவிபூஷன் விருது வழங்குவதால் அதை புறக் கணிப்பதாக ஜானகி ஏற்கனவேஅறிவித்து இருந்தார். அதன்படி நேற்று அவர் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago