முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தலில் நட்சத்திரங்கள் போட்டி அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.6 - கர்நாடக சட்டசபை தேர்தலில் சினிமா நடிகர்கள, நடிகைகள் போட்டியிடுவது அதிகமாகி வருகிறது. 220 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் தம்முடைய பெயர் இடம்பெறுமா என்ற நிலையில் காங்கிரசார் காத்திருக்கின்றனர். 

இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு என்பவர் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி சார்பாக பிரபலமாகி வரும் நடிகைகள் பூஜா காந்தி, பக்ஷிதா பிரேம் ஆகியோரும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார். இவர்களில் ரெய்ச்சூர் தொகுதியில் பூஜா காந்தியும், சாம்ராஜ்நகரில் ரக்ஷிதா பிரேமும் போட்டியிடுவார்கள் என்று பி.ஸ்ரீராமுலு அறிவித்துள்ளார். மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள முங்கரு மாலி என்ற படத்தில் பூஜா காந்தி நடித்துள்ளார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் பூஜா காந்தியின் பெயர் பிரபலமாகி வருவதோடு அடுத்த பல படங்களில் நடிக்க வாய்ப்பை உருவாக்கி உள்ளதாம். பூஜா காந்தி, முதலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் சேர்ந்தார்.  அதிலிருந்து விலகி முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா பக்ஷ கட்சியின் சேர்ந்தார். அதிலிருந்து விலகி தற்போது பி.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஆனால் பிஎஸ்ஆர். காங்கிரசுக்கு மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில்தான் செல்வாக்கு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 5000-க்கும் மேற்பட்ட இடங்களில் வெறும் 86 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிரபல திரைப்பட இயக்குனர் பிரேமை ரக்ஷிதா திருமணம் செய்துள்ளார். 

பிரபல கன்னட நடிகர்களான ராம்யா, பவனா ஆகிய இருவரும் காங்கிரஸ் தேர்தல் கமிட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் காங்கிரசுக்கு தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மற்றொரு பிரபல கன்னட நடிகரான தர்ஷனுக்கும் காங்கிரஸ் வலைவீசி உள்ளது. மேலும் மாண்டியாவில் காங்கிரஸ் சார்பாக அம்பரீஷூம் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மேலும் தெலுங்கு நடிகரும் மத்தி ய அமைச்சருமான சிரஞ்சீவியும் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். கர்நாடம்-ஆந்திர எல்லைப்பகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்