முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க தேசிய செயலாளர் வாணி மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 6 - டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வாணி திரிபாதி அடையாளம் தெரியாத சிலரால் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வாணி திரிபாதியை தாக்கியுள்ளனர். காவல்துறைக்கு தகவல் கிடைத்து வந்து பார்ப்பதற்குள், தாக்கியவர்கள் தப்பிச் சென்றனர். பிறகு வாணி திரிபாதியை காவலர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் ்ஈடுபட்ட தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாணி திரிபாதி, 

நான் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் என்னுடைய கார் மீது மோதியது. அந்த காரில் இருந்த ஆசாமிகள் என்னுடைய காருக்கு வந்து எனது டிரைவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தார்கள் என்றார். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் நான் காரின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தேன். போலீசுக்கு தகவல் கொடுத்தேன். 

அவர்கள் வருவதற்குள் அந்த ஆசாமிகள் ஓடிவிட்டார்கள். என் டிரைவர் இல்லாவிட்டால் எனக்கு என்ன ஏற்பட்டிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று அச்சத்துடன் தெரிவித்தார். தனது காரை வழிமறித்து தாக்கியபோது நூற்றுக்கணக்கான கார்கள் கடந்து சென்றன. ஒருவர்கூட நிறுத்தி உதவ முன் வரவில்லை என்றும் வாணி திரிபாதி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago