முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரடி பணஉதவி திட்டத்தில் சிக்கல்: பிரதமர் ஒப்புதல்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - மத்திய அரசு அளிக்கும் மானிய உதவியை நேரடியாக பணமாக வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இருப்பினும் இத்திட்டம் தோல்வியடையாமல் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்த திட்டம் மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். 

இத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி 43 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இவ்விதம் மானிய உதவி வழங்குவதில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியமும் சேர்த்து வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நேரடி பண உதவி திட்ட தேசிய குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு செய்த பிரதமர் இத்திட்டத்தில் இன்னும் செலல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. ஜனவரி மாதம் 1 ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதை முழுவீச்சில் செயல்படுத்துவதில் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்திட்டம் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது இது போன்ற பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இதனால் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறோம். இதன் காரணமாக இது தோல்வியை தழுவ விடக் கூடாது. இதை மிக சிறப்பாக செயல்படுத்தி இத்திட்டத்தின்பலன் உரியவரை சென்றடைய செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்