முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் பல பிரதமர் வேட்பாளர்கள்: காங். தாக்கு

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - பாரதீய ஜனதா கட்சியில் பல பிரதமர் வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான மணீஷ்திவாரி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இரட்டை அதிகார மையம் இருப்பதை பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரசின் பதில் என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட போது மணீஷ்திவாரி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, 

இரட்டை அதிகார மையம் குறித்து பா.ஜ.க பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அந்த கட்சியில் பல பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர். காத்திருக்கும் பிரதமர்கள், பதுங்கியிருக்கும் பிரதமர்கள், வருத்தத்தில் உள்ள பிரதமர்கள் என்று பல ரகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். உட்கட்சி போர் என்று தோன்றும்படியான போக்குகள் அங்கு உள்ளன. அப்படியிருக்கும் போது இரட்டை அதிகார மையம் பற்றி பா.ஜ.க பேசிகிறதென்றால் சிரிப்புதான் வருகிறது.

இந்தியா என்கிற அமைப்பு இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றில் நம்பிக்கையும் பற்றும் உள்ள எனக்கு குஜராத் முதல்வர் கூறும் கருத்துக்கள் பற்றி அவ்வப்போது கவலை எழுகிறது. குஜராத்தில் செய்ததை அவர் இந்தியா முழுவதும் செய்து காட்ட மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்