முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் எழுச்சி பேரணி: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

லண்டன், ஏப். 7 - இலங்கை அரசின் மீது ஐ.நா. சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் லண்டனில் எழுச்சி பேரணி நடந்தது. இந்த பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள் முதல் பெண்கள் வரை பெரும் திரளானோர் பங்கேற்றனர். பேரணியை கந்தையா ராஜமனோகரன் தொகுத்து வழங்கினார். அதில் டைரக்டர் பாரதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஜெயானந்த மூர்த்தி, தமிழ் இணையோர் அமைப்பை சேர்ந்த பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பேரணியில் டைரக்டர் பாரதிராஜா பேசுகையில், ஈழம் கிடைக்கும். இனிமேல் தமிழன் என்பவன் ஈழத் தமிழன், இந்திய தமிழன், மலேசிய தமிழன், கனடா தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழன் எல்லோரும் ஒன்றுதான். ஒரு குடையின் கீழ் இருக்கிறோம் என்றார். அதை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் இல்லம் நோக்கி பேரணி புறப்பட்டது. பேரணியின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்