முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-ம்தேதி நடை திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஏப்ரல்.8 - சபரிமலை அய்யப்பன் கோவிலில், சித்திரை விசுவை முன்னிட்டு வருகிற 10-ம்தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 11-ம் தேதி முதல் அய்யப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். சகஸ்ரகலசாபிஷேகம் படிபூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை அய்யப்பனுக்கு நடைபெறும்.

 வரும் 14-ம் தேதி சித்திரை விசு அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை விசு கனி காணுதல் நடைபெறும். இதையொட்டி அய்யப்பனை சுற்றி கனி வகைகள், பூக்கள், பட்டாடைகள், தங்க நகைகள், மங்கல பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த கோலத்தில் அய்யப்பனை பக்தர்கள் தரிசித்துச் செல்வார்கள்.   

சித்திரை விசு அன்று தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். இந்த நாணயத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்