முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த ராணுவ வீரர் ஹேமராஜின் மனைவியிடம் கொள்ளை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரை, ஏப். 8 - பாகிஸ்தான் வீரர்களால் தலை துண்டித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர் ஹேமராஜின் மனைவியிடம் இருந்து ரூ. 10 லட்சம் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஹேமராஜின் வீரமரணத்தைதொடர்ந்து அவரது மனைவி தர்மவதிக்கு மத்திய அரசே நிவாரண உதவிகளை வழங்கியது. அவரது வங்கி கணக்கில் போடப்பட்டிருந்த அந்த நிதியில் இருந்து ரூ. 60 லட்சத்தை மர்ம நபர்கள் சிலர் கடந்த மாதம் 25 ம் தேதி முறைகேடான வழியில் எடுக்க முயன்றனர். எனினும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஷேர்நகர் கிராமத்தில் உள்ள தர்மவதியின் வீட்டிற்கு அமித்குமார் என்ற இளைஞர் வந்தார். தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், தன்னை ராணுவ தலைமையகத்தில் இருந்து உயரதிகாரிகள் அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வழங்கியுள்ள நிதியுதவியை ஒரே வங்கியில் வைத்திருக்காமல் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு அவர் அறிவுரை கூறினார். 

இதை தொடர்ந்து சட்டாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ. 20 லட்சத்தை எடுக்க தர்மவதி ஒப்புக் கொண்டார். அந்த பணத்தில் ரூ. 10 லட்சத்தை தன் மகள் ஷிவானியின் பெயரில் அதே கிளையில் நிரந்தர வைப்பு நிதியில் அவர் கணக்கு வைத்தார். மீதமுள்ள ரூ. 30 லட்சத்தை அருகில் உள்ள புகாரி கிராம வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்தார். இதற்காக அமீத்குமாரின் மோட்டார் சைக்கிளில் தர்மவதி சென்றார். 

மற்றொரு மோட்டார் சைக்கிளில் பகவான்சிங்கும், கஜேந்திரசிங்கும் சென்றனர். பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்திய அமித்குமார், பெட்ரோல் போட வேண்டியிருப்பதால் வண்டியை விட்டு இறங்குமாறு கூறினார். இதை நம்பி வண்டியை விட்டு தர்மவதி இறங்கியதும் அமித்குமார் ரூ. 10 லட்சம் வைக்கப்பட்டிருந்த பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago