முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி-2 ஏவுகணை: வெற்றிகர சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பாலாசூர், ஏப். 8 - அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அக்னி - 2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இது ஒரு நடுத்தர ரக ஏவுகணையாகும். ஒடிசா மாநில கடற்கரையில் இருந்து நேற்று காலை 10.20 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டி தாக்கக் கூடிய வல்லமை படைத்தது இந்த ஏவுகணையாகும். தரையில் இருந்து தரை நோக்கி சென்று தாக்கக் கூடிய ஏவுகணை இந்த ஏவுகணை. 

இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றாகும். அக்னி -2 ஏவுகணை கடந்த முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ம் தேதியன்று இதே இடத்தில் இருந்து சோதித்து பார்க்கப்பட்டது. அப்போதும் இந்த சோதனைக்கு வெற்றி கிடைத்தது. இந்த ஏவுகணை 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். 17 டன் எடை கொண்டதாகும். ஆயிரம் கிலோவிற்கு மேலான அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலும் தாக்கக் கூடிய வல்லமை படைத்தது இந்த ஏவுகணை. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்