முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை படுகொலை: பன்னாட்டு விசாரணைக்கு வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஏப். 8 - இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  வலியுறுத்தி உள்ளார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற ்ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்  ஈ்ழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ராஜபக்சேவை உலக நாடுகள் இனப் படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும், 'இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தனி ்ழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வைகோ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்